அன்வாரை மிரட்டும் RAFIZI & NIK NAZMI!

top-news

மே 29,


பி.கே.ஆர் தலைமை பொறுப்புகளுக்கான தேர்தலில் தோல்வி அடைந்த பொருளாதார அமைச்சர் Datuk Seri Rafizi Ramli, இயற்கை வளங்கள் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் Nik Nazmi Nik Ahmad இருவரும் அமைச்சர் பதவியிலிருந்து விலகியிருப்பது அன்வாரை மறைமுகமாக மிரட்டப்படுவது போல் இருப்பதாக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் Datuk Zaid Ibrahim தெரிவித்துள்ளார். இருவரும் அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகாமல் விடுப்புகளை எடுப்பதாகவும் விடுப்பிற்குப் பின்னர் அவர்களின் பதவி விலகம் அமலுக்கு வருவது போல அறிவித்துள்ளனர். 

அவர்கள் இருவரும் கட்சித் தேர்தலின் போதே கட்சியின் தலைமையால் ஓரங்கட்டப்படுவதாகப் பல நேரங்களில் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுமுள்ளதை Datuk Zaid Ibrahim நினைவூட்டினார். இதன் தொடர்ச்சியாக அவர்களின் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருப்பது அன்வாரிடம் மறைமுகமாக அவர்கள் எதையோ வலியுறுத்த விரும்புவதாகவும் விடுமுறைக்கானக் கால அவகாசத்திற்குள் அன்வார் அவர்கள் இருவரும் எதிர்பார்ப்பதை நிறைவேற்ற வேண்டும் இல்லையெனில் அமைச்சரவையிலிருந்து விலகியவர்கள் அடுத்தக்கட்டமாக ஆட்சியிலிருந்தும் விலக வாய்ப்புகள் இருப்பதாகவும் Datuk Zaid Ibrahim தெரிவித்தார்.

Datuk Zaid Ibrahim berpendapat bahawa tindakan Rafizi Ramli dan Nik Nazmi Nik Ahmad mengambil cuti sebelum pengumuman rasmi peletakan jawatan sebagai menteri merupakan satu bentuk tekanan tidak langsung terhadap Perdana Menteri, Datuk Seri Anwar Ibrahim, agar mempertimbangkan dan memenuhi tuntutan mereka sebelum tarikh peletakan jawatan berkuat kuasa.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *