நாடாளுமன்றத்தை ராஜினாமா செய்து பெர்சாமா கட்சியில் இணைந்த RAFIZI & NIK NAZMI

top-news
FREE WEBSITE AD

மே 17,

பி.கே.ஆர் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பொருளாதார அமைச்சரும் பி.கே.ஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவருமான Datuk Seri Rafizi Ramli தனது பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். ரபீசியுடன் இயற்கை வளங்கள் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை முன்னாள் அமைச்சரும் பி.கே.ஆரின் முன்னாள் உதவித் தலைவருமான Nik Nazmi Nik Ahmad-உம் தனது SETIAWANGSA நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

கடந்த பி.கே.ஆரின் கட்சித் தேர்தலில் தோல்வி அடைந்த ரபீசியும் நிக் நஸ்மியும் அமைச்சரவையிலிருந்து விலகியதை அடுத்து தொடர்ந்து அன்வார் தலைமையிலான ஆட்சியை விமர்சித்து வந்தனர். தற்போது பி.கே.ஆரிலிருந்து விலகியிருக்கும் இருவரும் BERSAMA கட்சியின் தலைமை பொறுப்பில் இணைந்துள்ளனர். கடந்த 2016 இல் தோற்றுவிக்கப்பட்ட பெர்சாமா கட்சிக்குப் புதிய சின்னமாக மான் சின்னத்தையும் அறிமுகப்படுத்தியிருப்பதாகப் பெர்சாமா கட்சியின் தோற்றுநர் Tan Gin Theam தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *