ரபீஸி, நிக் நஸ்மிக்கு ஆதரவளித்த பி.கே.ஆரி 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
- THINAGAREN SANGGAREN
- 17 May, 2026
மே 17
பி.கே.ஆர் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பொருளாதார அமைச்சரும் பி.கே.ஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவருமான Datuk Seri Rafizi Ramli தனது பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த போது அவர்களுக்குப் பி.கே.ஆரின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர்.
ரபீசியும் நிக் நஸ்மியும் ஒரே நேரத்தில் கட்சியிலிருந்து விலகுவதை அறிவித்த போது அதே அரங்கத்தில் பி.கே.ஆரின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ரபீசி, நிக் நஸ்மியின் முடிவுக்கு ஆதரவளித்துள்ளனர். Balik Pulau நாடாளுமன்ற உறுப்பினர் Wan Chik, Subang நாடாளுமன்ற உறுப்பினர் Wong Chen, Ampang நாடாளுமன்ற உறுப்பினர் Rodziah Ismail, Sungai Siput நாடாளுமன்ற உறுப்பினர் Kesavan Subramaniam, WANGSA MAJU நாடாளுமன்ற உறுப்பினர் Zahir Hassan, பெத்தாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் Lee Chean Chun ஆகிய ஐயவரும் ரபீசி, நிக் நஸ்மியுடன் அதே நிகழ்ச்சியில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐவரும் பி.கே.ஆர் கட்சியிலிருந்து விலகுவது குறித்தும் தங்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வது குறித்தும் எந்தவொரு கருத்தும் இதுவரையும் தெரிவிக்கவில்லை.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



