ரபீஸிக்கு ஆதரவளித்த 5 பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை!
- THINAGAREN SANGGAREN
- 20 May, 2026
மே 20,
பி.கே.ஆரிலிருந்து விலகி பெர்சாமா கட்சியில் இணைந்த முன்னாள் பொருளாதார அமைச்சரும் பி.கே.ஆரின் முன்னாள் துணைத் தலைவருமான Datuk Seri Rafizi Ramliக்கு ஆதரவளிக்கும் வகையில் செயல்பட்ட பி.கே.ஆரின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகப் பி.கே.ஆர் கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கும் என பி.கே.ஆர் கட்சியின் பொதுச் செயலாளரும் துணை அமைச்சருமான Datuk Dr Fuziah Salleh தெரிவித்தார்.
ரபீசியும் நிக் நஸ்மியும் பி.கே.ஆரிலிருந்து விலகுவதுடன் அவர்களுடைய நாடாளுமன்றப் பதவிகளையும் ராஜினாமா செய்வதை அறிவிக்கும் போது அவருக்கு ஆதரவாக இருந்த Balik Pulau நாடாளுமன்ற உறுப்பினர் Wan Chik, Subang நாடாளுமன்ற உறுப்பினர் Wong Chen, Ampang நாடாளுமன்ற உறுப்பினர் Rodziah Ismail, Sungai Siput நாடாளுமன்ற உறுப்பினர் Kesavan Subramaniam, WANGSA MAJU நாடாளுமன்ற உறுப்பினர் Zahir Hassan, பெத்தாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் Lee Chean Chun ஆகிய ஐயவரும் பி.கே,ஆரின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சியின் சட்டவிதிகளுக்கு இணங்காமல் அதனை மீறும் உறுப்பினர்கள் மீது கட்சியின் தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழு முடிவுகளை எடுக்கும் என்றும் தற்போது நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகவும் பி.கே.ஆர் கட்சியின் பொதுச் செயலாளரும் துணை அமைச்சருமான Datuk Dr Fuziah Salleh தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



