NURUL IZZAH காணவில்லை! RAFIZI சாடல்!
- THINAGAREN SANGGAREN
- 29 Apr, 2026
ஏப்ரல் 29,
பி.கே.ஆரின் துணைத் தலைவரும் பிரதமர் அன்வாரின் மகளுமான Nurul Izzah Anwar நாட்டின் முக்கிய பிரச்சனைக்களுக்குக் குரல் கொடுக்காமல் எங்கே சென்றார் என பி.கே.ஆரின் முன்னாள் துணைத் தலைவரும் பண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான Datuk Seri Rafizi Ramli கேள்வி எழுப்பினார். நூருல் இசா கட்சியின் தலைமையில் இருக்கிறார். மேலும் பிரதமரின் செல்ல மகளாகவும் இருக்கிறார். ஆனால் சமீபக் காலமாக அவர் எந்தவொரு பிரச்சனைக்கும் குரல் கொடுக்காமல் அமைதியாகவே இருக்கிறார் என Datuk Seri Rafizi Ramli தெரிவித்தார்.
பி.கே.ஆர் கட்சியின் தொகுதிகளில் நடத்தப்பட்ட ஆண்டுக் கூட்டத்தில் சலசலப்புகள் ஏற்பட்ட போது நூருல் இசா அமைதியாகவே இருந்தார், ஊழல் பிரச்சனைகள் எழுந்த போதும், குறிப்பாக பி.கே.ஆரின் உயர்மட்ட தலைவர்களின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட போதும் நூருல் இசா அமைதியாக இருக்கிறார். இப்போது திடீரென லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைமை இயக்குநர் நியமிக்கப்பட்டது முகநூலில் ஒரு பதிவைப் போட்டு விட்டு காணாமல் போய்விட்டார் என Datuk Seri Rafizi Ramli சாடினார்.
நூருல் இசா பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவர். பிரதமர் எனும் முறையில் அன்வார் ஒரு சில கருத்துகளைப் பொதுவில் வெளியிடவோ கட்சி பிரச்சனைகளில் நேரடியாகவோ தலையிடமாட்டார். ஆனால் நூருல் இசா எந்தவோர் அரசியல் பதவிகளிலும் இல்லை என்பதால் கட்சியில் ஏற்படும் குழப்பத்திற்கு வாயைத் திறக்கலாம் என Datuk Seri Rafizi Ramli கடுமையாக நூருல் இசாவைச் சாடினார்.
கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற பி.கே.ஆர் கட்சியின் தேர்தலில் நடப்பு துணைத் தலைவரான Datuk Seri Rafizi Ramliஐ நூருல் இசா எதிர்த்துப் போட்டியிட்டார். பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவர் தேர்தலில் நூருல் இசா 9,803 வாக்குகளையும் Datuk Seri Rafizi Ramli 3,866 வாக்குகளையும் பெற்று Datuk Seri Rafizi Ramli தோல்வி அடைந்ததை அடுத்து நூருல் இசா பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



