பி.கே.ஆரில் அதிகரித்திருக்கும் துரோகிகள்! RAFIZI குற்றச்சாட்டு!

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 2, 

பி.கே.ஆர் கட்சி மக்களின் நம்பிக்கையைச் சம்பாதிக்க நீண்ட ஆண்டுகள் எடுத்துக்கொண்டதாகவும் ஆனால் சமீபக் காலமாக மக்களின் நம்பிக்கையை இழந்து வருவதாகவும் அதற்கு முக்கிய காரணம் பி.கே.ஆரில் குறிப்பாக 2019 க்குப் பின்னர் இணைந்த துரோகிகள் என்றும் பி.கே.ஆர் முன்னாள் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான DATUK SERI RAFIZI RAMLI வெளிப்படயாகக் குற்றச்சாட்டை முன்வைத்தார். 2018 இல் பி.கே.ஆர் கட்சி அதன் கூட்டணி கட்சிகளுடன் ஆட்சியைக் கைப்பற்றியதும் அதுனால் வரையில் பி.கே.ஆர் செயல்படுத்த வேண்டியதாக இருந்த முக்கிய சீர்த்திருத்தங்களைச் செயல்படுத்த அதிகமாக உழைக்க வேண்டியதாக இருந்தது. ஆட்சியை அமைத்ததும் அதிகமான உறுப்பினர்களுடன் சீர்த்திருத்தங்களை மேற்கொண்டால் விரைவாக மக்களிடையே அரசாங்கத்தின் செயல்திட்டங்களைக் கொண்டு சேர்க்க முடியும் என்பதைப் பி.கே.ஆர் தலைமை நம்பியதாகவும் DATUK SERI RAFIZI RAMLI தெரிவித்தார்.

அப்படியானக் காலத்தில் பி.கே.ஆரின் உறுப்பினர் எண்ணிக்கை மேம்படுத்த மக்களிடையே பி.கே.ஆர் சுதந்திரமாகப் பிரச்சாரத்தை மேற்கொண்டது. இதனால் பி.கே.ஆரில் அதிகமானோர் உறுப்பினர்களாக இணைந்து அவர்களின் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வந்தனர். அந்த வேளையில் திடீரென பி.கே.ஆரின் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்ததை உணர்ந்த தாம் புதிய உறுப்பினர்களின் கடந்த காலச் செயல்பாடுகளில் மக்களுக்கு எதிராகவும் பி.கே.ஆரின் கொள்கைகளுடன் முரண்பட்டிருப்பதையும் கண்டறிந்ததாகவும் இம்மாதிரியானவர்களின் படையெடுப்பால் பி.கே.ஆரின் தொடக்கத்திலிருந்து ஆதரவளித்த பெரும்பாலானவர்கள் ஒதுக்கப்படுவார்கள் என்பதைத் தாம் உணர்ந்து குறிப்பிட்ட சிலரைக் கட்சியிலிருந்து விலக்கும்படி வலியுறுத்தியதால் தனக்கும் அப்போது பி.கே.ஆரின் துணைத் தலைவராக இருந்த AZMIN ALI-க்கும் கருத்து முரண் ஏற்பட்டதாகவும் DATUK SERI RAFIZI RAMLI தெரிவித்தார்.

அதன் பின்னர் துணைத்  தலைவராகப் பொறுப்பேற்ற நான் பெரும்பாலான உறுப்பினர்களை நீக்கியதாகவும் அவர்களில் பெரும்பாலான துரோகிகள் அவர்களின் சொந்த கட்சிக்கும் விசுவாசமாக இல்லாமல் அரசியல் பலத்தாலும் பண பலத்தாலும் பி.கே.ஆரில் நீடித்ததாகவும் அவர்களையும் தாம் கட்சியிலிருந்து வெளியேற்றியதால் அவர்களால் பயனடைந்த முக்கிய உறுப்பினர்கள் எனக்கு எதிராக இந்த 2025 பி.கே.ஆர் தேர்தலில் எனக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ததாகவும் DATUK SERI RAFIZI RAMLI தெரிவித்தார். பி.கே.ஆரின் தொடக்கத்திலிருந்து உறுப்பினர்களாக இருந்து வந்த பல பி.கே.ஆர் மூத்த உறுப்பினர்களால் இப்போதும் என் தோல்வியையும் அவர்களின் தோல்வியையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என ரபீசி தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *