அரசு அதிகாரிகளை அரசியலுக்குப் பயன்படுத்தாதீர்! Razifi எச்சரிக்கை!

- Sangeetha K Loganathan
- 09 Jun, 2025
ஜூன் 9,
கட்சித் தேர்தலால் மனநிறைவில்லாத கட்சி உறுப்பினர்கள் சமூகவலைத்தளங்களில் பகிரும் குறைகளை நீக்கும் செயல்களை அரசாங்கம் முன்னெடுத்திருப்பது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகப் பி.கே.ஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரும் முன்னாள் பொருளாதார அமைச்சருமான Datuk Seri Rafizi Ramli தெரிவித்துள்ளார். முன்னதாகத் தேசிய பல்லூடகப் பாதுகாப்பு ஆணையமான MCMC முக்கிய பி.கே.ஆர் தலைவர்கள் சமூகவலைத்தளங்களில் பகிரும் கருத்துகளை முடக்குவதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
கட்சித் தேர்தலில் ஏற்பட்ட முரண்களை அதன் உறுப்பினர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்வதால் அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்பட போவதில்லை என்றும் ஆனால் அரசு நிறுவனங்களில் அரசு அதிகாரிகள் இதற்காக மெனக்கெட்டு பதிவுகளை நீக்குவது அவசியமற்றது என்றும் அரசு அதிகாரிகளை அரசியல் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுத்துவதைத் தாம் எச்சரிப்பதாகவும் பி.கே.ஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரும் முன்னாள் பொருளாதார அமைச்சருமான Datuk Seri Rafizi Ramli தெரிவித்தார்.
Rafizi Ramli menggesa agar penjawat awam tidak digunakan untuk menekan rakyat yang memberi pandangan berbeza berhubung pemilihan PKR. Beliau mendakwa ada individu disiasat tanpa prosedur sah, termasuk rampasan telefon oleh SKMM dan polis.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *