அன்வாருக்கு நான் எதிரியல்ல! என்னை எதிரியாக்கி விடாதீர்கள்!

top-news

ஜூலை 7,


பிரதமரும் பி.கே.ஆர் கட்சியின் தலைவருமான Datuk Seri Anwar Ibrahimக்கு எதிராகச் செயல்படும் எண்ணம் எனக்கு இல்லை என்றும் ஆனால் என்னை அந்த நிர்பந்தத்திற்குத் தள்ளிவிடாதீர்கள் என முன்னாள் அமைச்சரும் பி.கே.ஆரின் முன்னாள் துணைத்தலைவருமான Datuk Seri Rafizi Ramli இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்தார். முந்தைய காலங்களில் பி.கே.ஆரில் நிகழ்ந்த பிளவுகளால் கட்சியின் பின்னடைவுகளால் கட்சி பெரும் பாதிப்பை எதிர்நோக்கிய போது கட்சியை மீண்டும் தூக்கி நிறுத்தும் தூண்களாக நானும் இருந்திருக்கிறேன். இப்போது என்னால் பிளவு ஏற்படும் என்றால் அதே சுமையை இப்போது கட்சியின் பொறுப்பில் இருப்பவர்களுக்குக் கொடுக்க வேண்டாம் என நான் நினைக்கிறேன் என பி.கே.ஆரின் முன்னாள் துணைத்தலைவர் Datuk Seri Rafizi Ramli விளக்கமளித்தார். 


இன்று பி.கே.ஆரின் முன்னாள் துணைத்தலைவர் Datuk Seri Rafizi Ramli தலைமையில் பி.கே.ஆரின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்திய போது Datuk Seri Rafizi Ramli இந்த விளக்கத்தை அளித்தார். இன்று Subang நாடாளுமன்ற அலுவகத்தில் Setiawangsa நாடாளுமன்ற உறுப்பினர் Nik Nazmi Nik Ahmad, Ampang நாடாளுமன்ற உறுப்பினர் , Rodziah Ismail. Subang நாடாளுமன்ற உறுப்பினர் Wong Che Wangsa Maju நாடாளுமன்ற உறுப்பினர் Zahir Hassan, Balik Pulau நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Muhammad Bakhtiar Wan Chik , Ledang நாடாளுமன்ற உறுப்பினர் Syed Ibrahim Syed Noh ஆகியோர் Datuk Seri Rafizi Ramliக்கு ஆதரவாகச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டனர்.

Datuk Seri Rafizi Ramli menegaskan beliau bukan musuh Datuk Seri Anwar Ibrahim dan meminta agar tidak dijadikan musuh. Beliau menolak unsur perpecahan dalam PKR dan menyeru tanggungjawab parti dipikul bersama oleh kepimpinan sekarang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *