அன்வாரை மீறி அமைச்சர் அலுவலகத்திலிருந்து வெளியேறிய Rafizi Ramli!

top-news

ஜூன் 14,


கடந்த மே மாதம் பி.கே.ஆர் தேர்தலில் தோல்வி அடைந்ததால் பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்து வெளியேறிய Datuk Seri Rafizi Ramli மீண்டும் அமைச்சர் பதவிக்குத் திரும்புவார் என நேற்று பிரதமர் அன்வார் நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில் இனி பொருளாதார அமைச்சர் அலுவலகம் பக்கமே வரமாட்டேன் என Datuk Seri Rafizi Ramli தெரிவித்துள்ளார். இன்று காலை பொருளாதார அமைச்சர் அலுவலகத்திலிருந்த தனது அனைத்து பொருள்களையும் காலி செய்து Datuk Seri Rafizi Ramli வெளியேறினார்.

தாம் பணியாற்றிய பொருளாதார அமைச்சரவை ஊழியர்களுக்கும் தனது சிறப்பு அதிகாரிகளான Azraai Bahari Nasruddin, Benjamin Quek, James Chai, Ismat Qayyum, Haqimi Zamri ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன் பொருளாதார அமைச்சர் அலுவலகத்திற்குத் தாம் வருவது இதுவே கடைசி முறை என Datuk Seri Rafizi Ramli தெரிவித்துள்ளார். பொருளாதார அமைச்சின் சிறப்பு அதிகாரிகளான இந்த ஐவரும் எனக்காகத் தனது சொந்த வேலைகளிலிருந்து ராஜினாமா செய்து என்னுடன் பொருளாதார அமைச்சர் அலுவலகத்தில் சிறப்பு அதிகாரிகளாகப் பொறுப்பேற்றதாக Datuk Seri Rafizi Ramli தெரிவித்தார்.


Datuk Seri Rafizi Ramli mengosongkan pejabat Menteri Ekonomi dan menegaskan tidak akan kembali, walaupun PM Anwar berharap beliau kembali menyertai Kabinet. Rafizi turut merakam kenangan bersama lima pegawai khas yang sebelum ini meletak jawatan demi beliau.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *