பாஸ் கட்சியின் ஆதரவு எனக்கு தேவையில்லை! - Rafizi Ramli சாடல்!

top-news

ஜுலை 9,


பாஸ் கட்சி போன்ற தெளிவற்ற அரசியல் கட்சிகளின் ஆதரவுத் தமக்கு தேவையில்லை என பி.கே.ஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் Datuk Seri Rafizi Ramli தெரிவித்துள்ளார். நீதித்துறையில் அரசியல் கட்சிகளின் தலையீடு இருப்பதாக நான் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்குப் பின்னனியில் எந்தவோர் அரசியல் கட்சியும் லாபம் பெறுவதைத் தாம் விரும்பவில்லை என Datuk Seri Rafizi Ramli திட்டவட்டமாகத் தெரிவித்தார். அதிலும் பாஸ் கட்சி மற்றவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையைக் கூட அறிந்திருக்காமல் கண்மூடித்தனமாகச் செயல்படும் என்பதை Datuk Seri Rafizi Ramli சுட்டிக்காட்டினார்.

இதே போல தான் 1MDB ஊழல் வழக்கின் போதும் பாஸ் கட்சி நஜீப்பிற்கு எதிராகப் போர்க்கொடியைத் தூக்கியது, அதன் பின்னர் அதே 1MDB ஊழல் வழக்கில் நஜீப்பிற்கு ஆதரவு நிலைப்பாட்டையும் இப்போது எடுத்திருக்கிறது. பாஸ் கட்சி உண்மையான பி.கே.ஆர் விசுவாசிகளைக் கண்டது இல்லை. பி.கே.ஆரில் கருத்து முரண் இருப்பதால் மற்றவர்கள் முதுகில் ஒய்யாரமாகச் சவாரி செய்யும் பாஸ் கட்சியின் ஆதரவை நான் ஏற்கமாட்டேன் என Datuk Seri Rafizi Ramli பாஸ் கட்சியைக் கடுமையாகச் சாடினார்.


Datuk Seri Rafizi Ramli menolak sokongan PAS terhadap dakwaan beliau berhubung campur tangan politik dalam pelantikan Ketua Hakim Negara. Rafizi menegaskan tidak perlukan parti yang tidak konsisten seperti PAS untuk meraih keuntungan politik melalui isu ini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *