சட்டவிரோத யூ சுற்று செய்த டிரெய்லர் ஓட்டுநர்- சாலையோரத்தில் நிறுத்தப்பட்ட காரை மோதினார்!

top-news
FREE WEBSITE AD

சுங்கை பூலோ, அக்.1-

அனுமதிக்கப்படாத இடத்தில் யூ சுற்றுச் செய்து ஜாலான் ஹொஸ்பிட்டல் சுங்கை பூலோ சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ஒரு காரை டிரெய்லர் ஒன்று மோதியதாகக் கூறப்பட்டது.

சமூக வலைத் தளங்களில் பரவிய 32 வினாடிகள் கொண்ட அக்காணொளியில் அந்த டிரெய்லர் பின்னோக்கிச் செல்வதற்கு முன்பாக யூ சுற்றுச் செய்து சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரை மோதி விட்டது.

அந்த காணொளி பதிவில் சந்திப்புக்கு நுழையும் பகுதியில் யூ சுற்றுச் செய்யத் தடை விதிக்கும் எச்சரிக்கைப் பலகையுடன் டிரெய்லர் யூ சுற்றுச் செய்வது தெளிவாகக் காண்பிக்கப்பட்டதாக சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் எஸ்பி முகமட் ஹாஃபிஸ் முகமட் நோர் தெரிவித்தார்.

கடந்த திங்கள்கிழமை பிற்பகல் 3.40 மணிக்கு நிகழ்ந்த இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. இருந்த போதிலும் அவ்விரு வாகனங்களும் சேதமடைந்து விட்டன.இதுகுறித்து மேற்கொண்ட தொடக்கக்கட்ட விசாரணைப்படி கிள்ளானிலிருந்து வந்த டிரெய்லர் ஓட்டுநர் சுங்கை பூலோவிலுள்ள ஒரு தொழிற்சாலைக்குச் சென்று கொண்டிருந்த போது வழிதவறி நுழைந்து விட்டது. கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த டிரெய்லர் ஓட்டுநர் யூ சுற்றுச் செய்ய முயன்று பின்னோக்கிச் சென்ற போது இடதுபுற சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு புரோட்டோன் சாகா காரை மோதி விட்டார்.சம்பந்தப்பட்ட டிரெய்லர் ஓட்டுநர் மற்றும் புரோட்டோன் சாகா ஓட்டுநரும் அதே நாளில் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போக்குவரத்து நிலையத்திற்கு போலீஸ் புகார் செய்ய வந்தனர்.

இச்சம்பவம் 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டம், 430 ஆவது பிரிவின் கீழ் விசாரணை செய்யப்படுவதாக ஓர் அறிக்கையில் எஸ்பி முகமட் ஹாஃபிஸ் முகமட் நோர் குறிப்பிட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *