மெக்சிகோவில் கோர ரயில் விபத்து 13 பேர் பலி மற்றும் 98 பேர் படுகாயம்!

top-news
FREE WEBSITE AD

தெற்கு மெக்சிகோவில் பசிபிக் பெருங்கடலையும் மெக்சிகோ வளைகுடாவையும் இணைக்கும் இன்டர் ஓசியானிக் ரயில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 98 பயணிகள் படுகாயமடைந்து உள்ளனர். ஒசாகா மற்றும் வேராக்ரூஸ் எல்லைக்கு அருகிலுள்ள நிஜாண்டா என்ற இடத்தில் ரயில் திரும்ப முயன்றபோது இந்த விபத்து நேரிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த சமயத்தில் ரயிலில் மொத்தம் 241 பயணிகளும் 9 ஊழியர்களும் இருந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த முக்கிய ரயில் சேவை தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் மற்றும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக ஓசாகா மாநில அரசு அறிவித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *