ராமர் கோவில் நன்கொடை முறைகேடு: பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன்? – காங்கிரஸ் கேள்வி
- Surendran Sumdraraj
- 14 Jul, 2026
புதுடெல்லி, ஜூலை 14-
அயோத்தி ராமர் கோவிலுக்குப் பக்தர்கள் வழங்கிய நன்கொடைகளில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பது ஏன் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், ஊழலை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம் எனக் கூறிவரும் பிரதமர், மக்களின் நம்பிக்கையுடன் தொடர்புடைய இந்த முக்கிய விவகாரத்தில் கடந்த ஒரு மாதமாகப் பதிலளிக்காமல் இருப்பதாகக் குற்றஞ்சாட்டினார். நன்கொடை வழங்கிய கோடிக்கணக்கான பக்தர்களுக்கு உண்மை நிலையை அறிந்துகொள்ளும் உரிமை இருப்பதால், பிரதமர் தனது மவுனத்தைக் கலைத்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நன்கொடை முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், கோவில் அறக்கட்டளையின் கணக்குகள் தடயவியல் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. மூத்த நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், கீழ்மட்டப் பணியாளர்கள் மட்டும் குறிவைக்கப்படுவதாகவும் அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



