ரமணனை அமைச்சராக்கி அன்வார் தவறு செய்துவிட்டார்! - Rafizi Ramli சாடல்!
- Thinagaren Sanggaren
- 21 Dec, 2025
டிசம்பர் 21,
அமைச்சரவை மாற்றத்தில் அன்வார் செய்திருக்கும் பெரிய தவறு என்னவெனில் ரமணனை அமைச்சராக்கியிருப்பது என பி.கே.ஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரும் முன்னாள் பொருளாதார அமைச்சருமான Datuk Seri Rafizi Ramli அன்வார் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ரமணன் அரசியல் கற்றது ம.இ.காவில் என்பதை நான் அறிவேன். ஆனால் அவர் பி.கே.ஆரில் இணைந்தது 2020 என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது ரமணனுக்கு அமைச்சரவையில் கிடைத்திருக்கும் பொறுப்பு என்பது என்பது 20 ஆண்டுகளாகப் பி.கே.ஆரில் இருக்கும் தொண்டர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது என Datuk Seri Rafizi Ramli தெரிவித்தார்.
முன்னாள் அரசியல்வாதிகள் பி.கே.ஆரில் இணைந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் அமைச்சராகி விடலாம் எனும் தவறான எண்ணத்தைப் பி.கே.ஆர் தொண்டர்களிடையே அன்வார் விதைத்துவிட்டார். இதனால் பெரும்பாலான சீனியர்கள் பி.கே.ஆரிலிருந்து விலகும் அபாயம் நிகழ்ந்துள்ளது. அன்வார் ரமணனுக்கு அமைச்சர் பதவி வழங்கியிருப்பது மிக பெரிய தவறு என்றும் அடுத்த தலைமுறை பி.கே.ஆர் தலைவர்களுக்கு இது தவறான அரசியல் ஞானத்தைப் போதிக்கும் என்றும் பி.கே.ஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரும் முன்னாள் பொருளாதார அமைச்சருமான Datuk Seri Rafizi Ramli தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



