இந்தியர்களுக்கு நான் இருக்கிறேன்! இந்தியர்களுக்கான அரசு திட்டங்கள் 17 அக்தோபர் தொடங்கும்! DATUK SERI RAMANAN

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 15, 
அரசாங்கத்தில் இருக்கும் இந்தியத் தலைவர்கள் அவர்களால் இயன்ற நலத்திட்டங்களை இந்திய சமூகத்திற்குச் செய்து வருவதாகவும் துணை அமைச்சரான தாம் பொறுப்புடன் செயல்படுவதை மட்டும் தாம் உறுதிப்படுத்துவதாகவும் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் இன்று தெரிவித்தார். நான் இங்கே இந்திய சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற பொறுப்புடன் இருக்கிறேன்,யாருடைய பொறுப்பையும் நான் பிடுங்கிக் கொள்ளவில்லை என டத்தோஸ்ரீ இரமணன் தெரிவித்தார். 

தீபாவளியை முன்னிட்டு இன்று BANK RAKYAT அலுவலகத்தில் இந்தியர்களுக்கானச் சிறப்புத் திட்டங்களை டத்தோஸ்ரீ இரமணன் அறிவித்தார். மலேசியாவில் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கல்வி அடைவுநிலையை அதிகரிக்க 200 தமிழ்ப்பள்ளிகளில் பகுதி நேர வகுப்புகளை நடத்த 80 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக டத்தோஸ்ரீ இரமணன் தெரிவித்தார். 

பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு பயிலும் இந்திய மாணவர்களுக்கு இலவசமாகப் புதிய மடிக்கணிணிகள் வழங்குவதாகவும் 3000 மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் 17 அக்தோபர் mitra.gov.my அகப்பக்கத்தில் விண்ணப்பம் செய்யலாம் என்றும் டத்தோஸ்ரீ இரமணன் தெரிவித்தார்.

173 தமிழ்ப்பள்ளிகளில் தளவாடப் பொருள்களை வாங்க சுமார் 28 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் இது கல்வி அமைச்சின் மூலமாக நேரடியாகத் தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்படும் என்றும் டத்தோஸ்ரீ இரமணன் தெரிவித்தார்.

வறுமையிலிருக்கும் 1064 இந்திய குடும்பங்களுக்கு மாதம் 300 ரிங்கிட் உதவி நிதி வழங்கப்படும் என்றும் ஆண்டுக்கு 1,750 ரிங்கிட் வரையில் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் பல்கலைக்கழகத்திற்குத் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு நுழைவு கட்டணச் சுமைகளைக் குறைக்க 1 கோடி வெள்ளி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் பல்கலைக்கழக மாணவர்களின் சிறப்பு நிதி ஒதுக்கீட்டின் மூலமாகத் தலா 2,000 ரிங்கிட் பெறலாம் என்றும் பேறு குறைந்த மாணவர்களுக்குத் தலா 3000 ரிங்கிட் நிதி வழங்கப்படும் என்றும் டத்தோஸ்ரீ இரமணன் தெரிவித்தார்.  தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் திட்டங்களுக்கு எந்தவோர் இடைத்தரகர்களையும் நாம் விதிக்கவில்லை. மித்ரா மூலமாகவும் ஒற்றுமை அமைச்சின் அதிகாரப்பூர்வ வலைத்தலத்திலும் இந்த உதவி நிதிகளைப் பெற விண்ணப்பிக்கும்படி துணை அமைச்சர்டத்தோஸ்ரீ இரமணன் கேட்டுக்கொண்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *