நான் யாரையும் புறக்கணிக்கவில்லை! புகார் அளித்தால் விளக்கமளிக்கிறேன்! ரமணன் விளக்கம்!
- Thinagaren Sanggaren
- 12 Dec, 2025
டிசம்பர் 12,
தொழில்முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் மீதான புகார்களைத் தாம் நேர்மையாக எதிர்கொள்ள விரும்புவதாக அதன் துணை அமைச்சர் Datuk Seri R Ramanan விளக்கமளித்தார். அமைச்சின் மூலமாக வழங்கப்படும் கூட்டுறவு நிதி போதுமானதாக இல்லை என்றும் ஒரு சில கூட்டுறவு கழகங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் வெளியான குற்றச்சாட்டுகளை Datuk Seri R Ramanan மறுத்தார். முறையான விண்ணப்பங்களின் அடிப்படையிலேயே நிதி வழங்கப்படுவதாகவும் தனிநபர் தலையீடுகள் இதில் இல்லை என்றும் Datuk Seri R Ramanan தெரிவித்தார்.
நான் யாரையும் புறக்கணிக்கவில்லை. எல்லா விண்ணப்பங்களும் முறையாக இருந்து சம்மந்தப்பட்ட கூட்டுறவுக் கழகம் நிராகரிக்கப்பட்டால் நேரடியாக அமைச்சில் புகார் அளிக்கலாம் என்றும் தனிப்பட்ட முறையில் தாம் நிராகரிக்கப்பட்ட கூட்டுறவுக் கழகங்களில் பட்டியலை மீண்டும் மறு ஆய்வு செய்ய கடமைப்பட்டிருப்பதாகவும் Datuk Seri R Ramanan தெரிவித்தார். சிறிய மூலதனத்தைக் கொண்டும் வரையறுக்கப்பட்ட மேலாண்மை கட்டமைப்புகளுடன் செயல்படுவதால் சமூகக் கூட்டுறவு நிறுவனங்கள் உதவியைப் பெறுவதில் சிக்கலை எதிர்நோக்கியிருப்பதாகத் தொழில்முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் துணை அமைச்சர் Datuk Seri R Ramanan விளக்கமளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



