ரமணனுக்கு எதிராகப் பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்!

top-news
FREE WEBSITE AD

மார்ச் 6,

ஜொகூர் மாநிலப் பி.கே.ஆர் மாநாட்டில் மனிதவள அமைச்சரும் பி.கே.ஆரின் தேசிய உதவித் தலைவருமான Datuk Seri R Ramanan மேடையில் பேசிக் கொண்டிருக்கும் தேவையற்ற கருத்துகளைப் பேசியதால் பி.கே.ஆர் உறுப்பினர்கள் ரமணனுக்கு எதிராக கோஷமிட்டனர். பி.கே.ஆரின் மூத்தத் தலைவரும் பாசிர் குடாங் நாடாளுமன்ற உறுப்பினருமான Hassan Karim ரமணன் தேவையற்ற கருத்துகளைப் பேசாதே என்றும் போது உனது உரை என்றும் கூச்சலிட்டதும் கூடியிருந்த பி.கே.ஆர் உறுப்பினர்களுக்கிடையில் சலசலப்பு ஏற்பட்டது. 

இது தொடர்பானக் காணொலிகள் சமூகவலைத்தலங்களில் படு வேகமாகவும் பரவியது. பி.கே.ஆர் உதவித் தலைவரான ரமண்னுக்கும் பி.கே.ஆர் முன்னாள் தலைவர் DATUK SERI RAFIZI RAMLIக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரணால் ரபீஸி ரம்லி கட்சிக்கு எதிராகப் பேசி சர்ச்சை ஏற்படுத்துவதாக ரமணன் ஜொகூர் மாநில பி.கே.ஆர் பேராளர் மாநாட்டில் பேசினார். மேலும் கட்சிக்குள் இருந்து கொண்டே கட்சியை அவமானப்படுத்தும் செயலைச் சிலர் செய்வதாக ரமணன் தெரிவித்தது. பாசிர் குடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் காரிம் கூச்சலிட்டு. இது ஜொகூர்.. இந்த ஜொகூரில் பி.கே.ஆருக்கு எதிராக யாரும் பேசவில்லை, மற்ற மாநில அரசியலை ஜொகூரில் திணிக்க வேண்டாம் என ரமணனை நோக்கி கூச்சலிட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *