முகைதீனை ஆதரிப்பது ராமசாமியின் சுயநலம்! – ராயர் விலாசல்!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 25,

கடந்த காலங்களில் முன்னாள் பிரதமர் Tan Sri Muhyiddin Yassin மீது அழுத்தமான குற்றச்சாட்டுகளை முன் வைத்த பேராசிரியர் ராமசாமி இப்போது அதே முகைதீனை ஆதரிப்பதற்கு ஒரே காரணம் ராமசாமியின் சுயநலம் மட்டும் தான் என ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN Rayer கடுமையாகச் சாடினார். சொஸ்மா தொடர்பான விளக்கத்தை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய RSN Rayer கடந்த காலங்களில் பேராசிரியர் ராமசாமி பினாங்கு துணை முதலமைச்சராக இருந்த போது சொஸ்மா தொடர்பாக அப்போதைய பிரதமர் முகைதீன் மீது கடுமையானக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தை RSN Rayer நினைவூட்டினார்.


இப்போது டி.ஏ.பி கட்சியிலிருந்து விலகிய பேராசிரியர் ராமசாமி அதே முகைதீனுடன் இணைந்து நாளை நடைபெறவிருக்கும் அன்வாருக்கு எதிரான போராட்டத்திலும் பங்கேற்கிறார் என RSN Rayer தெரிவித்தார். சொஸ்மா சட்டத்தைத் திருத்தம் செய்வதில் கால தாமதம் ஏற்பட்டாலும் சொஸ்மா வழக்குகள் நிலுவையில் இருப்பதையும் RSN Rayer சுட்டிக்காட்டினார். அதனால் சொஸ்மா வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் தோற்றுவிக்கப்பட வேண்டும் என RSN Rayer சட்டத்துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *