ஈரான் – ஈராக் பதற்றம்! மலேசியர்கள் தூதரகங்களுடன் தொடர்பில் இருக்க அறிவுறுத்தல்!
- Shan Siva
- 03 Oct, 2024
புத்ராஜெயா, அக் 3: தற்போது ஈராக் மற்றும் ஈரானில் வசிக்கும் அல்லது
வருகை தரும் அனைத்து மலேசியர்களையும், பிராந்தியத்தில்
அதிகரித்துள்ள பதற்றத்தின் காரணமாக இ-கான்சுலர் அமைப்பில் பதிவு செய்யுமாறு வெளியுறவுத்துறை அமைச்சு
வலியுறுத்தியுள்ளது.
இன்னும் அவ்வாறு
செய்யாதவர்கள் உடனடியாக பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மலேசியர்கள்
தேவையான புதுப்பிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்காக அந்தந்த நாடுகளில் உள்ள
தூதரகங்களுடன் நெருக்கமான தொடர்பைப் பேணுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அனைத்து
மலேசியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக நிலைமையை
உன்னிப்பாக வெளியுறவு அமைச்சு கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *