மரத்துக்குள் மனித எலும்புகள்! தவறான ஊகங்களைப் பரப்பாதீர்!
- Thinagaren Sanggaren
- 12 Sep, 2025
செப்டம்பர் 12,
செர்டாங்கில் உள்ள ஒரு தோட்டத்தில் மரத்தின் இடுக்குகளிலிருந்து மனித எலும்புகள் கண்டெடுக்கப்படட்தாக வெளிவந்த செய்திகள் குறித்து தவறான ஊகங்களைப் பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் இந்தோனேசியாவில் உள்ள செர்டாங் பெடாகாய் எனும் இடத்தில் நிகழ்ந்ததாகச் செர்டாங் மாநகர மன்றம் உறுதிப்படுத்தியது. கடந்த வாரம் இந்தோனேசியாவில் உள்ள செர்டாங் பெடாகாய் எனும் இடத்திலிருந்த காய்ந்த மரம் கனத்த மழையால் சரிந்ததாகவும் மரத்தின் உள்ளிருந்து மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதையும் செர்டாங் மாநகர் மன்றம் மேற்கோள்காட்டியது.
சுமார் 2 ஆண்டுகள் முன்னதாகக் காணாமல் போனதாக நம்பப்படும் ஓர் ஆடவரின் உடல் அது என அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் இந்தோனேசிய காவல்துறை விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் இதற்கும் மலேசியாவின் சிலாங்கூரில் உள்ள செர்டாங் மாவட்டத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



