2 வெளிநாட்டு எண்ணெய் கப்பல்களை சிறைப்பிடித்த ஈரான்!
- Muthu Kumar
- 06 Feb, 2026
ஈரானின் கடல்பகுதியில் எண்ணெய் கடத்தியதாகக் கூறி 2 வெளிநாட்டு எண்ணெய் கப்பல்களை அந்நாட்டுப் படைகள் சிறைப்பிடித்துள்ளன.ஈரானின் ஃபார்சி தீவின் அருகில் டீசல் உள்பட சுமார் 10 லட்சம் லிட்டர் எண்ணெய்யை ஏற்றிச் சென்ற 2 வெளிநாட்டு எண்ணெய் கப்பல்கள் நேற்று வியாழக்கிழமை (பிப். 5) சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, எண்ணெய் கப்பல்கள் புஷேர் நகரத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டதாகவும், அந்தக் கப்பல்களில் இருந்த 15 பணியாளர்கள் சட்டத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், ஈரானின் புரட்சிகர காவல்படையின் அதிகாரி ஜெனரல். ஹெய்தார் ஹோன்ரியன் மொஜாராட் தெரிவித்துள்ளார்.இருப்பினும், இந்தக் கப்பல்கள் எந்த நாட்டுக்குச் சொந்தமானவை எனும் தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. மேலும், அந்தக் கப்பல்கள் எண்ணெய் கடத்தலில் ஈடுபட்டன எனும் குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்படவில்லை.
முன்னதாக, 16 பணியாளர்களுடன் சென்ற வெளிநாட்டு எண்ணெய் கப்பல் ஒன்றைக் கடந்த டிசம்பர் மாதம் ஈரான் அதிகாரிகள் சிறைப்பிடித்தனர்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது முதல் பதவிக்காலத்தில், உலக நாடுகளுடன் ஈரான் 2015-இல் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து தன்னிச்சையாக விலகியதைத் தொடர்ந்து ஈரானின் இந்த நடவடிக்கைகள் தொடங்கியதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



