Tengku Zafrul தேவையில்லை! Kota Raja அம்னோ தலைவராக Raof Mokhtar நியமனம்!

top-news

ஜுன் 11,

அம்னோவிலிருந்து வெளியேறி பி.கே.ஆர் கட்சியில் இணைவதாக அமைச்சர் Tengku Datuk Seri Zafrul Tengku Abdul Aziz கடந்த மே மாதம் அறிவித்ததை அடுத்து அம்னோ தலைமைக்கும் பி.கே.ஆர் தலைமைக்கும் ஏற்பட்ட கருத்து மோதலுக்குப் பின்னர் தற்போது Tengku Datuk Seri Zafrul Tengku Abdul Aziz வகித்து வந்த அம்னோ பதவிகளிலிருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டிருப்பதாகவும் கோத்தா ராஜா அம்னோ தொகுதித் தலைவராக Raof Mokhtar நியமிக்கப்பட்டிருப்பதாகவும் சிலாங்கூர் அம்னோ தலைவர் Datuk Megat Zulkarnain Omardin இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

Tengku Datuk Seri Zafrul Tengku Abdul Aziz கடந்த மே மாதம் அம்னோவிலிருந்து விலகியதிலிருந்து கோத்தா ராஜா அம்னோ தலைவர் நியமனம் குறித்து அம்னோ தலைமையிடம் விவாதித்து வந்ததாகவும் இனி Tengku Datuk Seri Zafrul Tengku Abdul Aziz தேவையில்லை எனும் முடிவை அம்னோ தலைமை எடுத்த பின்னரே உடனடியாகக் கோத்தா ராஜா அம்னோ தலைவராக Raof Mokhtar நியமிக்கப்பட்டிருப்பதாகவும் சிலாங்கூர் அம்னோ தலைவர் Datuk Megat Zulkarnain Omardin தெரிவித்தார். Tengku Zafrul எனும் தனி நபர் எடுத்த முடிவால் கோத்தா ராஜா அம்னோ தொகுதிக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்பட கூடாது என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் கோத்தா ராஜா அம்னோ உறுப்பினர்கள் அம்னோவுக்கு நன்றியுடன் இருப்பதாகவும் அம்னோ தலைமைக்குக் கட்டுப்படுவதாகவும் சிலாங்கூர் அம்னோ தலைவர் Datuk Megat Zulkarnain Omardin தெரிவித்தார்.


Selepas Tengku Zafrul keluar UMNO dan sertai PKR, UMNO secara rasmi melantik Raof Mokhtar sebagai Ketua UMNO Kota Raja. Keputusan ini dibuat bagi memastikan kestabilan parti di Kota Raja tanpa dipengaruhi tindakan individu, kata Pengerusi UMNO Selangor.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *