சொகுசு கப்பலில் அரிய வகை வைரஸ் பரவல்: 3 பேர் பலி; 144 பேர் அச்சம்
- Surendran Sumdraraj
- 06 May, 2026
அட்லாண்டிக் பெருங்கடலில் பயணம் மேற்கொண்டிருந்த சொகுசு கப்பலில் அரிய வகை “ஹண்டா” வைரஸ் பரவியுள்ளதாகத் தகவல் வெளியாகி உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், கப்பலில் இருந்த 144 பயணிகளும் அச்சத்தில் உள்ளனர்.
டச்சு நாட்டைச் சேர்ந்த சொகுசு சுற்றுலா கப்பல் ஒன்று தென் அமெரிக்காவிலிருந்து பயணம் மேற்கொண்டபோது, சில பயணிகளுக்குக் கடுமையான காய்ச்சல், மூச்சுத்திணறல் மற்றும் உடல் பலவீனம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், “ஹண்டா” எனப்படும் அரிய வகை வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த வைரஸ் பொதுவாக எலிகள் மூலம் பரவக்கூடியதாகக் கருதப்படுகிறது. ஆனால், சில சந்தர்ப்பங்களில் மனிதர்களிடமும் பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. தற்போது கப்பல் கேப் வெர்தே கடலோர பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்தவர்களில் டச்சு தம்பதியரும், மற்றொருவரும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் பலருக்கு வைரஸ் அறிகுறிகள் தென்பட்டதால், சர்வதேச மருத்துவ குழுக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்த சம்பவம் உலகளவில் மீண்டும் தொற்று நோய் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



