RM635,000 லஞ்சம் பெற்ற 2 காவல் அதிகாரிகள் கைது!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 31,

ஜொகூரில் உள்ள தனியார் நபரிடமிருந்து RM635,000 லஞ்சம் கேட்டு பெற்றதாக நம்பப்படும் இரு காவல் அதிகாரிகளை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்தது. சூதாட்ட மையத்தை நடத்தி வந்த ஒரு தொழிலதிபரை மிரட்டி லஞ்சம் பெற்றதாகச் சந்தேகிக்கப்பட்ட இரு காவல் அதிகாரிகளிடம் ஜொகூர் மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் அலுவலகத்தில் நேற்று மாலை 4 மணி முதல் அதிகாலை 2 மணி வரையில் விசாரணையை மேற்கொண்டதாகவும் அதன் பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு இன்று காலை ஜொகூர் பாரு Majistret நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதாகவும் ஜொகூர் மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Hairul Ilham Hamzah தெரிவித்தார்.

40 வயது மதிக்கத்தக்க இரு காவல் அதிகாரிகளையும் மேலதிக விசாரணைக்காக 7 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கும்படி ஜொகூர் பாரு Majistret நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைக்காக லஞ்சம் கொடுத்ததாக நம்பப்படும் தொழிலதிபரையும் தேடி வருவதாகவும் சம்மந்தப்பட்ட தொழிலதிபர் தலைமறைவாகிய நிலையில் அவரின் நிறுவனத்தையும் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் சோதனையிடவிருப்பதாகவும் ஜொகூர் மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Hairul Ilham Hamzah தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *