2 அரசு அதிகாரிகள் ஊழல் வழக்கில் கைது! – SPRM

top-news

ஜூன் 18,


அரசு நில குத்தகைகள் தொடர்பான விண்ணப்பத்தின் போது ஊழலில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற அரசு அதிகாரியையும் நில அதிகாரி ஒருவரையில் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளதாகச் சபா மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர் Datuk S. Karunanithy தெரிவித்தார். கைது செய்யப்பட்ட இருவரும் கடந்த 2016 இல் RM66,000 மதிப்பிலானப் பணமோசடியில் ஈடுப்பட்டிருப்பதாக Datuk S. Karunanithy தெரிவித்தார். கைது செய்யப்பட்ட இருவரும் 50 முதல் 60 வயதுக்குற்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது.

நேற்று காலை 10 மணிக்கு அவர்கள் இருவரிடம் சபா மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் அலுவலகத்தின் விசாரணை நடத்தியதாகவும் விசாரணைக்குப் பின்னர் அவர்கள் இருவரும் கைத் செய்யப்பட்டிருப்பதாகவும் Datuk S. Karunanithy தெரிவித்தார். முதல் நபர் RM54,000 லஞ்சம் பெற்றதாகவும், இரண்டாவது நபர் RM12,000 பெற்றதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டதால் மேலதிக விசாணைக்காக அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் சபா மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர் Datuk S. Karunanithy தெரிவித்தார்.


Dua bekas pegawai kerajaan termasuk seorang pegawai tanah ditahan SPRM Sabah atas dakwaan rasuah RM66,000 berkaitan permohonan tanah kerajaan pada 2016. Kedua-duanya ditahan selepas disoal siasat dan kini dalam tahanan untuk siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *