RM 2,000 லஞ்சம் பெற்ற காவல் அதிகாரி கைது! SPRM KEDAH!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 11,

குற்றம்சுமத்தப்பட்டவரைப் போலிஸ் ஜாமினில் விடுவிக்க RM 2,000 லஞ்சம் பெற்ற காவல் அதிகாரியைக் கெடா மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்தது. நேற்று காலை 11 மணியளவில் பாதிக்கப்பட்ட ஒருவர் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் அளித்த நிலையில் காவல் நிலையத்திலேயே 30 வயது காவல் அதிகாரி கைது செய்யப்பட்டதாகக் கெடா மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர் Datuk Nazli Rasyid Sulong தெரிவித்தார். 

30 வயதுள்ள அந்த காவல் அதிகாரி குற்றம் சுமத்தப்பட்ட ஆடவரை விசாரிக்காமல் இருக்கவும் போலிசாரின் சிறப்பு உத்தரவாத ஜாமினைப் பெறவும் லஞ்சம் கேட்டு பெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கெடா மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர் Datuk Nazli Rasyid Sulong தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 30 வயது காவல் அதிகாரியை 3 நாள்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கும்படி இன்று சுங்கை பெட்டாணி Majistret நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *