ரவாங்கில் 43 பயணிகளுடன் லாரியை மோதிய பேருந்து! ஐவர் படுகாயம்! 38 பேர் மீட்பு!
- Thinagaren Sanggaren
- 11 Jan, 2026
ஜனவரி 11,
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் ரவாங் அருகில் லாரியின் பின்னாள் மோதி பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 2 ஓட்டுநர்களும் 3 பயணிகளும் படுகாயம் அடைந்ததுடன் பேருந்திலிருந்த மேலும் 38 பேர் சிராய்ப்புக் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இன்று அதிகாலை 5.24 மணிக்கு இவ்விபத்து குறித்து பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு மீட்பு அதிகாரிகளுடன் விரைந்ததாகச் சிலாங்கூர் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார்.
இன்று அதிகாலை 4.30 மணிக்குச் சிலாங்கூரிலிருந்து பினாங்கு நோக்கிச் சென்ற பேருந்து இது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த பயணிகள் பேருந்து லாரியின் பின்னாள் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தில் லாரி ஓட்டுநர்களும் பயணிகளும் இடிபாடுகளில் சிக்கியதால் மீட்புப் பணி தாமதமடைந்தாலும் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என Ahmad Mukhlis Mukhtar உறுதிப்படுத்தினார். பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும் விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தைக் காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



