MCMC, AI அடிப்படையிலான மோசடி உள்ளடக்கத்தை அகற்ற 1,602 கோரிக்கைகள்-ஃபஹ்மி ஃபட்ஸில்!

top-news
FREE WEBSITE AD

செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட மோசடி உள்ளடக்கம் மீதான நீக்குதல் உத்தரவுகளை பல சமூக ஊடக தளங்கள் முழுமையாகப் பின்பற்றத் தவறிவிட்டன என்று தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்ஸில் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 31 வரை, மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC, AI அடிப்படையிலான மோசடி உள்ளடக்கத்தை அகற்ற 1,602 கோரிக்கைகளைச் சமர்ப்பித்ததாக அவர் கூறினார்.இருப்பினும், 1,346 மட்டுமே அகற்றப்பட்டன, இது சுமார் 84% இணக்க விகிதத்தை பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.

MCMC-யின் கவனிப்பிலிருந்தும், சொந்தக் கருத்துகளிலிருந்தும், சமூக ஊடக தளங்கள் AI உள்ளடக்கம் தொடர்பான ஆன்லைன் பாதுகாப்பு பிரச்சினைகளை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.மாட்சிமை தங்கிய யாங் டி-பெர்டுவான் அகோங் மற்றும் பிரதமரும் கூட முதலீட்டுத் திட்டங்களை ஊக்குவிப்பதாகக் கூறப்படும் போலி மோசடிகளுக்கு பலியாகிவிட்டபோது இது நிரூபிக்கப்பட்டது என்று அவர் நேற்று  கேள்வி நேரத்தின் போது கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *