பலத்த காற்றின் காரணமாக லாபுஹான் டகாங்- நீலாய் சாலையோரம் முறிந்து விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன!
- Muthu Kumar
- 01 Sep, 2025
(எஸ்.எஸ்.மணிமாறன்)
சிப்பாங், செப். 1-
இங்கு வீசிய பலத்த காற்றின் காரணமாக லாபுஹான் - நீலாய் பிரதான சாலையோரத்தில் சாய்ந்து கிடந்த மரங்களை வெட்டி அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணிகளில் சிப்பாங் பொதுப்பணி இலாகா சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பிரிவின் குத்தகைப் பணியாளர்கள் ஈடுபட்டனர் என்று அப்பிரிவின் அதிகாரி ரம்லி இஸ்மாயில் தெரிவித்தார்.
சாய்ந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் துப்புரவுப் பணிகளை 23 பேர் கொண்ட குழு மேற்கொண்டதோடு 5 மணி நேர நடவடிக்கைக்குப் பிறகு பணிகள் நிறைவு பெற்றதாக அவர் கூறினார்.இவ்வட்டாரத்தில் குடியிருப்புப் பகுதியில் வசிப்போர் சிலர் அவசரப் பிரிவுக்கு வழங்கிய புகாரைத் தொடர்ந்து துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக ரம்லி தெரிவித்தார்.
நாட்டின் 68 ஆவது சுதந்திர தினத்தை பொதுமக்கள் கொண்டாடும் இந்த வேளையில் இப்பகுதி சாலைகளைப் பயன்படுத்தும் வாகன மோட்டிகளின் பாதுகாப்பையும் அவர்களது நலனையும் கருதி இந்தத்துரித நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



