பிபா தடை, இறுதி வரை போராட்டம் - திஎம்ஜே

top-news

கோலாலம்பூர், செப். 27-

செய்தி-வெற்றி மைந்தன்

மலேசிய கால்பந்து சங்கத்திற்கு தண்டனை விதித்ததுடன், ஏழு வாரிசு வீரர்களை எந்த காரணமும் தெரிவிக்காமல் தடை செய்த அனைத்துலக கால்பந்து சம்மேளனத்தின் நடவடிக்கையை ஜோகூர் மாநில பட்டத்து இளவரசரும், தற்காலிக சுல்தானுமான துங்கு மக்கோத்தா இஸ்மாயில் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது பதிவில், துங்கு மக்கோத்தா இஸ்மாயில், தேசிய பதிவுத் துறையின் உறுதிப்படுத்தல் கடிதத்தைப் பகிர்ந்தார். இந்தக் கடிதம், பாதிக்கப்பட்ட அனைத்து வீரர்களும் மலேசிய குடியுரிமை பெறுவதற்கு தேவையான சட்டபூர்வமான நடைமுறைகளைப் பின்பற்றி, மலேசிய குடிமக்களாகி, ஹரிமாவ் மலாயா அணிக்குத் தகுதியுடையவர்களாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது.

இதனால், பிபாவின் இந்த தண்டனை முடிவு குறித்து மலேசியக் கால்பந்து சங்கம் விரைவாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று துங்கு மக்ரோடா இஸ்மாயில் வலியுறுத்தினார். மற்றொரு கேள்வி, பிபா எந்த காரணத்தையும் தெரிவிக்காமல் தண்டனையை விதித்துள்ளது. மேலும், மேல்முறையீட்டு செயல்முறை முடிவடையாத நிலையில், இந்த முடிவை பொது வெளியில் விரைவாக வெளியிட்டது ஆச்சரியமளிக்கிறது என்று அவர் கூறினார்.

துங்கு மக்ரோடா இஸ்மாயில் எழுப்பிய கேள்விகள், பிபாவின் செயல்முறையில் உள்ள சில குறைபாடுகளை சுட்டிக்காட்டுகின்றன. எப்ஏஎம் இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய தயாராகி வருவதாக தெரிகிறது. மலேசியாவின் நற்பெயரைக் காக்க, இந்த செயல்முறை ஒருமைப்பாட்டுடன் நடைபெற வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *