திருமணமாகாத 16,951 பதின்ம வயதினர் கர்ப்பம்! - அமைச்சு அதிர்ச்சி
- Tamil Malar (Reporter)
- 20 Nov, 2025
செய்தி-வெற்றி மைந்தன்
கோலாலம்பூர், நவ. 20-
2020 முதல் 2024 வரையிலான ஐந்து ஆண்டுகளில் திருமணமாகாத 19 வயதுக்குட்பட்ட 16,951 இளம்பெண்கள் கர்ப்பமடைந்துள்ளதாக மலேசியாவில் பதிவாகியுள்ளது. இந்த அதிர்ச்சித் தகவலை பெண்கள், குடும்ப நல வாழ்வு, சமுதாய மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ நான்சி ஷுக்ரி இன்று தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கை அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட தரவுகளின் அடிப்படையில் சுகாதார அமைச்சு தொகுத்தளித்தது என்று அமைச்சர் கூறினார்.
இளம் வயதுக் கர்ப்பத்தைத் தடுக்க பெண்கள், குடும்பம், சமுதாய மேம்பாட்டு அமைச்சகம் பல்வேறு திட்டங்களைத் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது என்று நான்சி ஷுக்ரி விளக்கினார்.
இதில் முக்கியமாக சுகாதாரக் கல்வியைப் பள்ளிகள், சமுதாய அமைப்புகள் வழியாக வலுப்படுத்துதல், இளம் பெண்களுக்கு தனிப்பட்ட ஆலோசனை வழங்குதல், பெற்றோர்-பிள்ளை உறவை வலுப்படுத்துதல், சமுதாய அளவில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட நடவடிக்கைகள் அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



