கைகலப்பில் ஈடுபட்ட 15 முதல் 18 வயது நால்வர் கைது!

top-news

மார்ச் 31,

அடுக்குமாடிக் குடியிருப்பின் வாகனம் நிறுத்துமிடத்தில் ஆடவரைத் தாக்கிய கும்பலைக் காவல்துறை கைது செய்துள்ளதாக வடக்கு ஜொகூர் பாரு மாவட்டக் காவல் ஆணையர் Balveer Singh Mahindar தெரிவித்தார். தாக்குதலுக்குள்ளான 21 வயது வாகனமோட்டி தனது குடும்பத்துடன் Bandaraya சாலையில் சென்றுக் கொண்டிருக்கும் போது தலைக்கவசத்தாலும் நாற்காலிகளாலும் தாக்கப்பட்டதாக நேற்று மாலை 6.30 மணிக்குக் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் 15 முதல் 18 வயதுடைய நால்வரைக் காவல்துறையினர் கைது செய்தனர். 


கைது செய்யப்பட்ட நால்வரில் இருவர் மீது முன்னமே குற்றவியல் வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட 15 முதல் 18 வயதுள்ள நால்வரையும் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருவதாகவும் வடக்கு ஜொகூர் பாரு மாவட்டக் காவல் ஆணையர் Balveer Singh Mahindar தெரிவித்தார்.

Empat remaja berusia 15 hingga 18 tahun ditahan kerana menyerang seorang pemandu di tempat letak kenderaan di Johor Bahru. Mangsa, seorang lelaki berusia 21 tahun dipukul dengan topi keledar dan kerusi. Dua daripada suspek mempunyai rekod jenayah sebelum ini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *