குட்டையில் விழுந்த இளைஞர் சடலமாக மீட்பு!

- Sangeetha K Loganathan
- 18 May, 2025
மே 18,
நேற்று மாலை குட்டையில் நீந்தி விளையாடிக் கொண்டிருந்த 18 வயது இளைஞர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார். நேற்று மாலை 6 மணியளவில் கோத்தா பாருவில் உள்ள Jalan Kilang Simen பகுதியில் உள்ள கைவிடப்பட்ட குட்டையில் இளைஞர் ஒருவர் மூழ்கியதாகப் பொதுமக்களிடமிருந்து தகவல் பெற்றதும் சம்பவ இடத்திற்கு மீட்புப் படை அதிகாரிகளுடன் விரைந்ததாகப் பேராக் மாநில மீட்பு ஆணையம் தெரிவித்தது.
மீட்புப் படையினரன் பொதுமக்களும் தேடுதல் பணியில் ஈடுபட்ட நிலையில் இன்று காலை 9.27 மணிக்குக் காணாமல் போன 18 வயது இளைஞர் 15 அடி ஆழத்திலிருந்து மீட்கப்பட்டதாகவும் உயிரிழந்தவர் 18 வயது Muhammad Fazrul Qusry என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இளைஞர் மீன் பிடிக்கும் போது குட்டையின் ஓரமாகக் குளித்துக் கொண்டிருந்த போது மூழ்கியதாகக் காவல்துறையிற் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Seorang remaja lelaki berusia 18 tahun ditemui lemas pagi ini selepas dilaporkan hilang ketika mandi di sebuah kolam tinggal di Jalan Kilang Simen, Kota Bharu. Mayatnya ditemui 15 kaki dalam oleh pasukan penyelamat bersama orang awam.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *