10 மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளானதில் இளைஞர் பலி!

top-news

மார்ச் 24,

மேற்கு தொடர்ச்சி நெடுஞ்சாலையின் மஞ்சோங் சாலையில் கும்பலாக நண்பர்களுடன் பயணம் செய்த 10 மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளானதில் 18 வயது மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார். அதிகாலை 1 மணியளவில் பழுதடைந்த லாரி அவசரப் பாதையில் சென்றுக்கொண்டிருந்ததாகவும் பின்னிருந்து வந்த மோட்டார் சைக்கிள் லாரியை மோதி பிற மோட்டார் சைக்கிள்களையும் மோதி விபத்தை ஏற்படுத்தியிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக Manjung, மாவட்டக் காவல் ஆணையர் Hasbullah Abd Rahman தெரிவித்தார்.

இந்த விபத்தில் 18 வயது இளைஞர் பலியானதுடன் அவரின் நண்பர்களான 7 மோட்டார் சைக்கிளோட்டிகளும் படுகாயம் அடைந்ததாகவும் படுகாயம் அடைந்தவர்கள் 18 முதல் 23 வயது இளைஞர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. விபத்தில் படுகாயம் அடைந்த 7 இளைஞர்களும் தற்போது Manjung அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மூவர் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பியதாக Manjung, மாவட்டக் காவல் ஆணையர் Hasbullah Abd Rahman தெரிவித்தார்.

Seorang penunggang motosikal berusia 18 tahun maut dalam kemalangan membabitkan 10 motosikal di Manjung. Kemalangan berlaku apabila sebuah motosikal melanggar lori rosak di lorong kecemasan menyebabkan perlanggaran berantai. Tujuh lagi penunggang cedera dan dirawat di hospital.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *