விபத்தில் பலியான இளைஞரிடம் கிலோ கணக்கில் போதைப்பொருள்!

top-news

மே 30,

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞர் பலியானதுடன் அவரின் மோட்டார் சைக்கிளிலிருந்து பல்வேறு வகையிலான போதைப்பொருள் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக மலாக்கா மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Dzulkhairi Mukhtar தெரிவித்தார். இன்று காலை 7.45 மணியளவில் அலோர் காஜாவிலிருந்து ஜாசின் செல்லும் சாலையில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் விபத்தில் 22 வயது இளைஞர் பலியானதாகவும் அவர் தெரிவித்தார்.

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் Perodua Bezza வாகனத்தை மோதி, மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் தப்பிக்க முயற்சி செய்த போது மற்றொரு லாரியை மோதியதில் 22 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் விபத்தில் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்கும் போது சுகாதாரப் பணியாளர்கள் சாலையில் சிதறிக் கிடந்த பொட்டலங்களில் போதைப்பொருள்கள் இருப்பதைக் கண்டதாகவும் மலாக்கா மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Dzulkhairi Mukhtar தெரிவித்தார். சோதனையில் 688.81 கிராம் heroin. 12 பொட்டலங்களில் 13.41 கிராம் எடையிலான methamphetamine, 450 பொட்டலங்களில் lutsinar போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக மலாக்கா மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Dzulkhairi Mukhtar தெரிவித்தார்.

Seorang pemuda maut dalam kemalangan motosikal di Melaka dan pihak polis menemui pelbagai jenis dadah seberat lebih 700 gram di tempat kejadian. Dadah itu termasuk heroin, methamphetamine dan bahan lutsinar yang dipercayai dadah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *