விபத்தில் இளம்பெண்கள் பலி! போதைப்பொருளுடன் வாகனமோட்டி கைது!

- Sangeetha K Loganathan
- 12 Jun, 2025
ஜூன் 12,
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் முன்னாள் சென்றுக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை மோது விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த 18 வயதுள்ள 2 இளம்பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நேற்று இரவு 11 மணியளவில் தெமர்லோவில் உள்ள Jalan Tengku Ismail சாலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாக TEMERLOH மாவட்டக் காவல் ஆணையர் Mazlan Hassan தெரிவித்தார். விபத்தில் உயிரிழந்த 2 இளம் பெண்களும் 18 வயதுள்ள LANCHANG மாவட்டத்தைச் சேர்ந்த Nur Alya, Siti Nur Syafiqah என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய Perodua Bezza வாகனமோட்டி 38 வயது உள்ளூர் ஆடவர் என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் விபத்தை ஏற்படுத்தியதும் சம்பவ இடத்திலேயே தப்பிக்க முயன்ற 38 வயது வாகனமோட்டியைப் பொதுமக்கள் சுற்றி வலைத்து பிடித்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட Perodua Bezza வாகனத்திலிருந்து 50.85 கிராம் syabu வகை போதைப்பொருளும் 0.85 கிராம் heroin வகை போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக TEMERLOH மாவட்டக் காவல் ஆணையர் Mazlan Hassan தெரிவித்தார்.
Dua remaja wanita berusia 18 tahun maut dalam kemalangan di Jalan Tengku Ismail, Temerloh apabila motosikal mereka dirempuh kereta Perodua Bezza. Pemandu berusia 38 tahun ditahan bersama syabu dan heroin selepas cuba melarikan diri.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *