லாரியை மோதிய கார்! இளைஞர் பலி!

top-news

ஜூன் 27,

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் லாரியை மோதி விபத்துக்குள்ளானதில் 18 வயதள இளம் வாகனமோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்றிரவு 9.27 மணிக்குக் கெனிங்காவிலிருந்து சூக் நோக்கி சென்றுக் கொண்டிருந்த Perodua Alza ரக வாகனம் எதிரில் வந்த லாரியை மோதி விபத்துக்குள்ளானதாகப் பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு மீட்புப் படை அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக Keningau மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Mohd Nidzam Sainkui தெரிவித்தார்.

விபத்தில் உயிரிழந்த 18 வயது இளைஞரின் உடல் வாகனத்தில் சிக்கியிருந்ததால் மீட்புப் படையினர் சிறப்பு இயந்திரங்களைப் பயன்படுத்தி வாகனமோட்டியை மீட்டதாகவும் பிரேதப் பரிசோதனைக்காக அவரின் உடல் Keningau அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் Keningau மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Mohd Nidzam Sainkui தெரிவித்தார். விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தைக் காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் லாரி ஓட்டுநர் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Seorang remaja lelaki berusia 18 tahun maut di tempat kejadian selepas keretanya merempuh lori di Keningau. Mangsa tersepit dalam kenderaan dan dikeluarkan menggunakan peralatan khas sebelum dihantar ke hospital untuk bedah siasat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *