லாரியின் பின் மோதிய வாகனம்! இளைஞர்கள் இருவர் பலி!

top-news

ஜுலை 2,


கட்டுப்பாட்டை இழந்த வாகனம் TRELER லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானதில் வாகனத்திலிருந்த இளைஞர்கள் இருவர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இன்று அதிகாலை 5.51 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் KUALA KANGSAR அருகில் இந்த விபத்து நிகழ்ந்ததாகப் பேராக் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார். விபத்தில் வாகனத்திலிருந்த இருவரும் இடிபாடுகளில் சிக்கியதால் மீட்புப் பணி தாமதமானதாக பேராக் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார்

உயிரிழந்த இருவரும் 25 வயது வாகனமோட்டி என்றும் அவருடன் பயணித்தவர் 22 வயது இளைஞர் என்றும் அடையாளம் காணப்பட்டிருப்பதாக பேராக் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார். காலை 7.50 மணிக்கு வாகனத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த இளைஞர்கள் இருவரின் உடலும் மீட்கப்பட்டு பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக பேராக் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார். விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தைக் காவல் துறையினர் விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Dua remaja lelaki maut selepas kereta yang mereka naiki hilang kawalan lalu merempuh belakang treler di lebuh raya berhampiran Kuala Kangsar. Mangsa berusia 22 dan 25 tahun tersepit dalam kenderaan dan meninggal di lokasi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *