லாரியில் மோதிய மோட்டார் சைக்கிள்! 17 வயது இளைஞர் பலி!

top-news

மே 22,

போக்குவரத்து விதிகளை மீறி கனரக லாரி U-TURN செய்த போது பின்னிருந்து வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து லாரியில் வலது பக்கம் மோதி விபத்துக்குள்ளானதில் 17 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் மாலை 4.35 மணிக்குக் கிள்ளானிலிருந்து காப்பார் செல்லும் சாலையில் நிகழ்ந்ததாக வடக்கு கிள்ளான் மாவட்டக் காவல் ஆணையர் S Vijaya Rao தெரிவித்தார். 

சம்மந்தப்பட்ட சாலையில் இலகுரக வாகனங்கள் மட்டுமே சாலை மாற்றில் திரும்ப முடியும் எனும் போது லாரி திரும்பியதால் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக S Vijaya Rao தெரிவித்தார். சம்மந்தப்பட்ட 44 வயது லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் உயிரிழந்த 17 வயது இளைஞரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கிள்ளான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Seorang remaja lelaki berusia 17 tahun maut selepas motosikal yang ditunggangnya melanggar sebuah lori yang membuat pusingan U secara haram di jalan Kapar-Klang. Pemandu lori berusia 44 tahun telah ditahan untuk siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *