துணை முதல்வருக்கு ஆசைப்பட்டே பிரேமலதா திமுகவில் இணைந்துள்ளார் -எடப்பாடி!

top-news
FREE WEBSITE AD

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைமையிலான கூட்டணி சுயநலம் நிறைந்தது என்றும், அதன் காரணமாகவே காங்கிரஸ் கட்சி முன்கூட்டியே ஆட்சியில் பங்கு கேட்டு வருவதாகவும் விமர்சித்துள்ளார்.

பொன்னேரியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், திமுக கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள ஒரு கட்சியின் பெண் தலைவர், கடந்த மாதம் நடைபெற்ற மாநாட்டிலேயே தமக்குத் துணை முதல்வர் (DCM) பதவி வேண்டும் என்று கேட்டதாகக் குறிப்பிட்டார். பிரேமலதா விஜயகாந்தின் பெயரைக் குறிப்பிடாமல், அவர் பதவிக்காகவே இக்கூட்டணியில் இணைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.

அதேவேளையில், அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும் திமுக கூட்டணிக்கும் உள்ள வேறுபாட்டையும் அவர் சுட்டிக்காட்டினார். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற ஒரே உன்னத நோக்கத்திற்காகவே தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், எதிர்க்கட்சிகளின் இந்த நேரடி விமர்சனங்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *