மதுபோதையில் ஓட்டி விபத்து… ராணுவ அதிகாரிக்கு ரிமாண்ட் நீட்டிப்பு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப். 29-

Lebuhraya Maju Expressway (MEX) சாலையில் ஏற்பட்ட உயிரிழப்பு விபத்து தொடர்பாகச் சந்தேகிக்கப்படும் ராணுவ அதிகாரியின் ரிமாண்ட் காலம் நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து Jabatan Siasatan dan Penguatkuasaan Trafik (JSPT) குவாலாலம்பூர் பிரிவு தலைவர், உதவி கமிஷனர் Mohd Zamzuri Mohd Isa விளக்கம் அளித்தார்.

அவரது கூறுகையில், சம்பவம் தொடர்பான விசாரணை இன்னும் முழுமையாக நிறைவடையாததால், ரிமாண்ட் காலத்தை நீட்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். “விசாரணை ஆவணம் (kertas siasatan) இன்னும் முழுமையாகத் தயார் செய்யப்படவில்லை. நாளை காலை மேலதிக நடவடிக்கைக்காக அது சமர்ப்பிக்கப்படும்,” என அவர் கூறினார்.

மேலும், இதுவரை 12 பேரிடமிருந்து வாக்குமூல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தின் முழு விவரங்களையும் உறுதி செய்ய போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்துள்ளனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *