விபத்தில் பல்கலைக்கழக மாணவிகள் பலி!
- Thinagaren Sanggaren
- 05 Jan, 2026
ஜனவரி 5,
ரெம்பாவ் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தை மோதி விபத்துக்குள்ளானதில் இளம்பெண்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று மாலை 4 மணியளவில் பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் மீட்புப் பணியாளர்களுடன் சம்ப இடத்திற்கு விரைந்ததாக REMBAU மாவட்டக் காவல் ஆணையர் Hasani Hussain தெரிவித்தார்.
உயிரிழந்த மாணவிகள் ரெம்பாவ் மாரா தொழில்கல்லூரியைச் சேர்ந்த 19 வயது Ismawanie Husna , Nur Ain Zulaisya என அடையாளம் காணப்பட்டிருப்பதாக REMBAU மாவட்டக் காவல் ஆணையர் Hasani Hussain தெரிவித்தார். கல்லூரியிலிருந்து லோபக்கில் உள்ள அவர்களின் வீட்டுக்குத் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த மாணவிகளின் உடல் பிரேதப்பரிசோதனைக்காக ரெம்பாவ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருப்பதாக REMBAU மாவட்டக் காவல் ஆணையர் Hasani Hussain தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



