சுகாதார அமைச்சால் அங்கீகரிக்கப்படாத 2,033 விளம்பரங்களை எம்.சி.எம்.சி அகற்றியுள்ளது!

top-news
FREE WEBSITE AD

ஜொகூர் பாரு, ஆக. 11-

இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்து ஆகஸ்ட் முதலாம் தேதி வரை மலேசிய சுகாதார அமைச்சு மற்றும் அது தொடர்புடைய நிறுவனங்களால் அங்கீகரிக்கப்படாத தயாரிப்புகள் மற்றும் சேவை தொடர்பான 2.033 விளம்பரங்களை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்.சி.எம்.சி அகற்றியுள்ளது.

இதுவரை சுமார் 2,283 புகார்கள் கிடைத்துள்ள நிலையில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், 2022ஆம் ஆண்டு தொடங்கியே விளம்பரங்களைக் குறைப்பதற்கான முயற்சிகளை தங்கள் தரப்பு மேற்கொண்டு வருவதாகவும் தொடர்பு துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.

"2022ஆம் ஆண்டில், எம்.சி.எம்.சிக்கு எட்டு புகார்கள் கிடைத்தது. 2023ஆம் ஆண்டில் 390 மற்றும் 2024ஆம் ஆண்டில் எங்களுக்குக் கிடைத்த புகார் 1643 ஆகும். என்றார் அவர்.
போலி மருந்துகள் அல்லது சுகாதார சேவை தொடர்பான விளம்பரங்களை அடையாளம் காண சுகாதார அமைச்சிடம் நிபுணத்துவம் இருப்பதால், இவ்விவகாரத்தில் தமது தரப்பு எப்பொழுதும் ஒத்துழைப்பு வழங்கும் என்று தியோ தெரிவித்தார்.

இதனிடையே, சுகாதார அமைச்சிடமிருந்து அறிக்கை கிடைத்தால், பதிவேற்றம் செய்யப்படும் விளம்பரங்களை அகற்றும்படி சமூக ஊடக நடத்துனர்களுக்கு எம்.சி.எம்.சி அறிவிக்கும் என்று அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *