பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட 17 வயது 20 வயதுடைய இளைஞர்கள் கைது!

top-news

ஜூலை 9,


பாலியல் வன்புணர்வுச் செய்ததாக நம்பப்படும் 17 வயது 20 வயதுள்ள 2 இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த செவ்வாய் கிழமை (8 ஜுலை 2025) பாகோவில் உள்ள சாலையில் சென்றுக் கொண்டிருந்த காதலர்களை மறித்து இருவரும் கொள்ளையிட முயற்சித்ததாகவும் கொள்ளையடித்த பின்னர் 20 வயது இளம்பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் மூவார் மாட்டக் காவல் ஆணையர் Raiz Mukhliz Azman Aziz தெரிவித்தார். 

நேற்று மாலை 7 மணியளவில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து புகாரைப் பெற்ற நிலையில் சம்மந்தப்பட்ட இருவரையும் இன்று அதிகாலை 4 மணியளாவில் மூவாரில் வெவ்வேறு பகுதிகளில் கைது செய்ததாக மூவார் மாட்டக் காவல் ஆணையர் Raiz Mukhliz Azman Aziz தெரிவித்தார். இருவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் சிறையும் பிரம்படிகளும் விதிக்கபடும் என மூவார் மாட்டக் காவல் ஆணையர் Raiz Mukhliz Azman Aziz தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து ஆதாரங்களைத் திரட்டியிருக்கும் காவல்துறை கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Dua remaja lelaki berusia 17 dan 20 tahun ditahan kerana disyaki merompak sepasang kekasih di Pagoh sebelum merogol mangsa wanita. Polis menahan mereka di lokasi berasingan di Muar dan sedang melengkapkan siasatan dengan bukti dari mangsa.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *