அசாம் ஜாவா முதல் கோல சிலாங்கூர் பாலம் வரை அடிக்கடி வாகன நெரிசல்!

top-news
FREE WEBSITE AD

(எஸ்.எஸ்.மணிமாறன்)

கோல சிலாங்கூர், செப்.15-

அசாம் ஜாவா சிற்றூரில் இருந்து கோல சிலாங்கூர் பாலம் வழியாக தஞ்சோங் காராங். சபாக் பெர்ணம் வரை முன்னோக்கிப் பயணிக்கும் வாகனமோட்டிகளால் காலை நேரங்களில் இப்பகுதியில் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டு வருவதாக மாவட்ட பொதுப்பணித்துறை சாலைக் கண்காணிப்புப்பிரிவு அதிகாரி ரஹ்மாட் சுலைமான் தெரிவித்தார்.

அதிகமானோர் ஒரே நேரத்தில் வாகனங்களில் இங்குள்ள பிரதான சாலைகளைப் பயன்படுத்துவதுதான் இந்த நெரிசல் ஏற்பட காரணம் என்று அவர் கூறினார்.கோல சிலாங்கூர் ஆற்றுப் பாலத்தின் வழியாக வடக்கு நோக்கிச் செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை என்று ரஹ்மாட் தெரிவித்தார்.

எனினும், கோல சிலாங்கூர் காவல்துறை சாலைப்போக்குவரத்து அதிகாரிகள் இந்தப் பிரச்சினைக்குத்தீர்வு காணும் வகையில் உரிய நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ள இருப்பதால் வாகன நெரிசல் குறையும் என்று தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *