2026 முதல் பாலர் பள்ளி பாடத்திட்டம் தொடங்கப்படும்!
- Muthu Kumar
- 11 Sep, 2025
கோலாலம்பூர், செப். 11-
2026 ஆண்டு முதல் அனைத்து ஒற்றுமை பாலர் பள்ளிகளிலும் 2026 பாலர் பள்ளி பாடத்திட்டம் தொடங்கப்படும் என தேசிய ஒருமைப்பாட்டுத் துறைத் துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
ஆரம்ப கால முதல் சிறார்களுக்கு கல்வியாற்றலை அதிகரிக்கும் நோக்கில் இந்த பாடத்திட்டம் தொடங்கப்படும் என நேற்று மேலவையில் கேள்வி நேரத்தின் போது அவர் குறிப்பிட்டார்.நாடு முழுவதும் அரசாங்க மற்றும் தனியார் பாலர் பள்ளிகளில் கல்வி அமைச்சு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் இதுவும் ஒரு பகுதியாகும் என்றார் அவர்.
இதுவரை 34 அரசாங்க பாலர் பள்ளிகள், 5 கெமாஸ் பாலர் பள்ளிகள், 3 ஒற்றுமை பாலர் பள்ளிகள் மற்றும் 8 தனியார் பாலர் பள்ளிகளில் 2026 பாலர் பள்ளி பாடத்திட்டம் பரிட்சார்த்த முறையில் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.இந்த பாடத்திட்டம் குறித்து அரசாங்கம் மற்றும் தனியார் பாலர் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
கடந்த ஜூலை மாதம் தொடங்கிய இந்த பயிற்சி டிசம்பர் 2025 வரை வழங்கப்படும் என்றார் அவர்.செனட்டர் முஸ்தபா மூசா எழுப்பிய கேள்விக்கு அவர் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



