5 வயது முதல் பாலர் கல்வி கட்டாயம் 13ஆவது மலேசியத் திட்டத்தில் கல்வித் துறைக்கு வெ 6,700 கோடி ஒதுக்கீடு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 1-

ஒரு குழந்தை ஐந்து வயதை அடைந்தது முதல் அவர்களுக்கு பாலர் கல்வி கட்டாயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாலர் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சேர்க்கை விகிதம் 98 சதவீதத்தை எட்டுவதையும், உலகளாவிய சராசரியைவிட அதிகமாக இருப்பதையும் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.

உகந்த பள்ளிக் கல்வி நேரம், சிறப்புப் பள்ளிகளின் செயல்திறன் மற்றும் திறமையான மாணவர்களுக்கான கல்வி மாதிரியை மேம்படுத்துவது குறித்தும் ஒரு மதிப்பாய்வு நடத்தப்படும்.

புத்ராஜெயா தேசிய கல்வி முறையின் தரத்தை மேம்படுத்தவும், அனைத்துலக கணிதம் மற்றும் அறிவியல் கல்வியில் அனைத்துலக மாணவர் மதிப்பீடு மற்றும் போக்குகளுக்கான திட்டத்தால் அளவிடப்படும் அனைத்துலக தரங்களுக்கு இணையாகக் கொண்டு வரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

''ஓர் உயிரூட்டப்பட்ட சமூகத்தை உருவாக்குவதற்கான எங்கள் முயற்சிகளில், இரக்கமுள்ள மற்றும் மரியாதைக்குரிய குடிமகன்களை வளர்ப்பதில் தரமான கல்விக்கு மாற்றாக ஈடு எதுவும் இல்லை என்பதை அரசாங்கம் அறிந்திருக்கிறது" என்று அன்வார் தெரிவித்தார்.

அனைத்து மாணவர்களும் தொடக்கப் பள்ளியோடு தங்களின் பள்ளிப் பருவத்தை முடித்துக் கொள்வதற்கு பதிலாக, அவர்கள் 5ஆம் படிவம் வரையில் கல்வி கற்பதை கட்டாயமாக்கும் ஒரு திருத்தம் குறித்த 33 நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவாதங்களை மக்களவை நேற்றுமுன்தினம்  கேட்டறிந்தது.

புதிய சட்டத்தை பின்பற்றத் தவறிய பெற்றோருக்கு எதிராக பரிந்துரைக்கப்பட்டிருக்கும் அபராதம் அல்லது சிறைத்தண்டனை குறித்து பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் கவலையை வெளிப்படுத்தி இருந்தனர்.

அத்தகைய தண்டனைகளை அமல்படுத்துவது தாமதப்படுத்தப்பட வேண்டும் என்று அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியதாக, நேற்று வியாழக்கிழமை மக்களவையில் 13ஆவது மலேசியத் திட்டத்தை தாக்கல் செய்யும்போது அன்வார் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *