நான் ராஜினாமா செய்கிறேன்! - அக்மால் சலே

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர் (ஜனவரி 15): மெர்லிமாவ் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் முகமது அக்மல் சலே, அடுத்த வாரம் முதல் மலாக்காவின் கிராமப்புற மேம்பாடு, விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கான நிர்வாக கவுன்சிலர் (exco) பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இன்று கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் (WTC) நடைபெற்ற 2025 அம்னோ இளைஞர் பொதுச் சபையில் தனது முக்கிய உரையை நிகழ்த்தும் போது அம்னோ இளைஞர் தலைவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட்  ஹமிடி மற்றும் மலாக்கா முதலமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் ரவூப் யூசோ ஆகியோருடன் கலந்துரையாடிய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று டாக்டர்  அக்மால் கூறினார்.

நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் அடிமட்ட மக்களின் குரலையும் அவர்களின் கவலைகளையும் சுமந்து செல்கிறேன் என்பதைக் காட்ட, அடுத்த வாரம் முதல் நான்  நிர்வாகக் குழு பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று இன்று அறிவிக்க விரும்புகிறேன் என்று அக்மால் கூறினார்.

முன்னதாக, ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ விலக வேண்டும் என்ற அவரது அழைப்பை அகமட் ஜாஹிட் நிராகரித்ததை அடுத்து, அக்மால் தனது தற்போதைய பதவிகளில் இருந்து விலகுவது குறித்து பரிசீலித்து வருவதாக ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டின.

இந்நிலையில் இளைஞர் தலைவரின் இந்தக் கருத்துக்க. பதிலளித்த மலாக்கா முதலமைச்சர்  ரவூஃப்,  அக்மாலின் முடிவை மதிப்பதாகவும், அது "இளைஞர்களின் வழி" என்றும் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஒரு முதலமைச்சராக, அவரின் அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்திற்காக  காத்திருப்பதாக அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *