டெய் மனைவியின் குற்றச்சாட்டுக்கு MACC பதில்
- Shan Siva
- 01 Dec, 2025
கோலாலம்பூர், டிச 1: சர்ச்சைக்குரிய
தொழிலதிபர் ஆல்பர்ட் டெய் கைது செய்யப்பட்டபோது, அவரது உடைமைகளை
அதிகாரிகள் சட்டவிரோதமாக பறிமுதல் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மலேசிய லஞ்ச
ஊழல் தடுப்பு ஆணையமான எம்ஏசிசி மறுத்துள்ளது.
டெய் கைது
செய்யப்பட்ட நாளில் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் பட்டியலை எம்ஏசிசி
அதிகாரிகள் ஒப்படைத்ததாகவும், அதில் அவர் தனிப்பட்ட முறையில்
கையெழுத்திட்டதாகவும் ஊழல் தடுப்பு அமைப்பின் தகவல் தொடர்பு பிரிவு
தெரிவித்துள்ளது.
MACC அதிகாரிகள் சரியான நடைமுறைகளைப் பின்பற்றாமல்
டெய்யின் சொத்துக்களைக் கைப்பற்றியதாக கூறப்படும் ஆதாரமற்ற கூற்றுகளை MACC வன்மையாக மறுக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறிமுதல்
செய்யப்பட்ட பொருட்களில் மொபைல் போன்கள், ஐபேட் மற்றும் டிஜிட்டல்
வீடியோ ரெக்கார்டர் ஆகியவை ஆதாரமாக வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!
இன்று முன்னதாக, டெய்யின் மனைவி லீ பெய் ரீ, தனது வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட
பொருட்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட அதிகாரிகளின் முழுமையான மற்றும்
கையொப்பமிடப்பட்ட பட்டியலை வெளியிடுமாறு MACC-யிடம் கேட்டுக்
கொண்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



