இனம் வாரியாக SPM தேர்வு முடிவுகளா? - அது போலியானது! - கல்வி அமைச்சு அறிவிப்பு
- Shan Siva
- 01 Apr, 2026
சிப்பாங், ஏப் 1: 2025 ஆம் ஆண்டுக்கான SPM தேர்வு முடிவுகளை
இனம் வாரியாகப் பிரித்துக் காட்டும் பத்திரிகை அறிக்கை போலியானது என கல்வித்துறை துணை
அமைச்சர் வோங் கா வோ தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையை அமைச்சகம் வெளியிடவில்லை என்றும், நேற்று அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ தேர்வு முடிவுகளில் அந்தத் தகவல் இடம்பெறவில்லை என்றும் அவர் கூறினார்.
வைரலாகும் அந்தத் தகவல்101% தவறானது. அது நிச்சயமாக உண்மையல்ல என்று
இன்று SKJT டெங்கில் பள்ளிக்கு மேற்கொண்ட பணிப்
பயணத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
நேற்று முதல் சமூக ஊடகங்களில் பரவி வரும், அமைச்சகத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட, இனம் வாரியாக மாணவர்களின் தேர்ச்சி சதவீதங்களைக் காட்டும்
பத்திரிகை அறிக்கை குறித்து வோங் இவ்வாறு பதிலளித்தார்.
சீன மற்றும் இந்திய மாணவர்களுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு மலாய் SPM தேர்வர்கள் குறைந்த
தேர்ச்சி சதவீதத்தைப் பெற்றதாகக் கூறும் ஒரு பகுப்பாய்வும் அந்த அறிக்கையில்
இடம்பெற்றிருந்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



